Advertisement

சிறப்பான கேப்டனாக செயல்பட்டதிற்கு நன்றிகள் - சௌரவ் கங்குலி!

இந்திய அணியின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், கோலி விலகுவதாக அறிவித்ததையடுத்து அவருக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
Sourav Ganguly Thanks Virat Kohli For His Tremendous Performance As T20I Captain
Sourav Ganguly Thanks Virat Kohli For His Tremendous Performance As T20I Captain (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 16, 2021 • 10:05 PM

இந்திய அணியின் கேப்டன் ஆன கோலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு பின், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இவருக்கு பின் யார் இந்திய அணியின் அடுத்த புதிய டி20 கேப்டன் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 16, 2021 • 10:05 PM

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறுகையில், “கோலி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த மிகப் பெரும் சொத்து. இவர் இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளிலும் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர்களில் ஒருவர், கோலியின் இந்த முடிவு எதிர்காலத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Trending

கோலி டி20 கேப்டனாக இதுவரை சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், அதுமட்டுமின்றி வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், வரும்காலங்களில் அவர் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், “இந்திய அணியில் எங்களிடம் ஒரு தெளிவான வழிகாட்டல் உள்ளது,. பணிச்சுமையை கருத்தில் கொண்டு, ஒரு சுமூகமான மாற்றம் இருப்பதை உறுதி செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

கடந்த ஆறுமாதங்களாக இது குறித்து கோலி மற்றும் தலைமை குழுவுடன் ஆலோசித்தேன். அதன் பின் இறுதியாக சிந்திக்கப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவு இது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால போக்கை வடிவமைப்பதில் கோலி ஒரு வீரராகவும், மூத்த வீரராகவும் தொடர்ந்து பங்களிப்பார்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement