
Sourav Ganguly to contest for CAB President's post (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவந்தார். சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
பிசிசிஐ தலைவர், செயலாளர் ஆகிய பதவிக்காலம் முடிவடையும் நிலையில், வரும் 18ஆம் தேதி மும்பையில் நடக்கும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பிசிசிஐ செயலாளராக இருக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா அந்த பதவியில் மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளார். ஆனால் தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். எனவே அவர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.