
ஒவ்வொரு காலகட்ட கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. 1983ஆம் ஆண்டில் கேப்டன் கபில் தேவ் தலைமையில் இந்தியா கோப்பை வென்ற பிறகு, இந்தியாவில் கிரிக்கெட் பட்டிதொட்டி எங்கும் பரவ துவங்கியது.
அப்போது கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், வெங்கடேஷ் பிரசாத் போன்ற முக்கிய வீரர்கள் இருந்தார்கள். இவர்கள் ஓய்வுபெற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவிக், டிராவிட், லக்ஷ்மன் என இந்திய கிரிக்கெட் அடுத்த தலைமுறைக்கு சென்றது.
தொடர்ந்து மகேந்திரசிங் தோனி, ஜாகீர் கான், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், பும்ரா என அடுத்த கட்டத்திற்கு கிரிக்கெட் சென்றுவிட்டது. இந்திய கிரிக்கெட் இப்படி அடுத்தடுத்து பல தலைமுறைகளைக் கண்டாலும் ரசிகர்களுக்கு ரசனை இப்படி அடுத்தடுத்த தலைமுறைக்கு முழுமையாக மாறவில்லை. கபில் தேவ் ரசிகர்கள் இன்னும் அவரைத்தான் புகழ்ந்து வருகிறார்கள்.