
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் மிகவும் முக்கியமானவராக மாறியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர் தொடர்ந்து பயன்படுத்தி, அதிக ரன்கள் குவித்து வருகிறார்.
கடந்த சில காலமாக இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் விளையாடி வந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
தான் அறிமுகமான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே ஸ்ரேயாஸ், சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கடந்த கவனம் பெற்றார். இரண்டு ஸ்கோர்களுமே இந்திய அணி, அதிக விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பதால் ஸ்ரேயாஸின் ஆட்டம் அதிக பேரால் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது.