சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டுவைன் பிரிட்டோரியஸ்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது 33 வயதான பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான முடிவு ஒன்றை எடுத்தேன். அது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட வேண்டும் என குறிக்கோளுடன் இருந்தேன். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுள் எனக்கு திறமையையும் வெற்றிக்கான தீவிர விருப்பத்தையும் கொடுத்தார். மீதமுள்ளவை அவரது கைகளில் இருந்தன என்றார்.
Trending
இனி டி20 மற்றும் பிற குறுகிய வடிவத்திலான கிரிக்கெட்டில் எனது கவனத்தை திருப்ப உள்ளேன். இதைச் செய்வதன் மூலம், எனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நான் சிறந்த சமநிலையைப் பெற முடியும். எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
முன்னாள் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸூக்கு எனது நன்றி. முதல் முறையாக சர்வதேச அணியில் இருந்து என்னை விடுவித்த பிறகு மீண்டும் என்னை அணிக்குள் கொண்டு வந்தவர் மற்றும் என்னை ஆதரித்து சிறந்த வீரராக மாற்ற உதவியர் அதனால் நான் அவருக்கு மிகுந்த நன்றி சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரிட்டோரியஸ் இதுவரை 30 டி20, 27 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி உள்ளார். இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் 2021ஆம் ஆண்டு பாகிஸ்தானிக்கு எதிரான டி20 போட்டியில் இவர் 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now