BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. அதன்பின் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கனக்கில் கைப்பறி அசத்தியது.
இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.
Trending
இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தி அறிவித்துள்ளது. அதன்படி 15 பேர் அடங்கிய இந்த தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுக வீரரான மேத்யூ பிரிட்ஸ்கீக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர சேனுரான் முத்துசாமிக்கும் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இதற்கிடையில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த டெம்பா பவுமா, மூன்றாவது போட்டியில் பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத டெம்பா பவுமா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் ஐடன் மார்க்ரம் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து அறிமுக வீரரான டெவால்ட் பிரீவிஸுக்கு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடியும் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் காயம் காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கீ, டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம் (முதல் டெஸ்ட் கேப்டன்), வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.
Win Big, Make Your Cricket Tales Now