
South Africa Captain Temba Bavuma Out Of T20 Series Against Pakistan (Image Source: Google)
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெய்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த டெம்பா பவுமா, தசைப்பிடிப்பு காரணமாக டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.