
ஒருநாள் உலகக்கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. வருகிற அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பைக்கான குவாலிபயர் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தரவரிசை பட்டியல் அடிப்படையில் எட்டு அணிகள் உறுதியாகிவிட்டன.
மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு 10 அணிகளுக்கு மத்தியில் தகுதிச்சுற்று போட்டி நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுகிறது. மொத்தம் பத்து அணிகள் இந்த வருடம் உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன. உலககோப்பைக்காக மைதானங்களின் பிட்ச்கள் தீவிரமாக தயார் செய்யும் வேலையை இப்போதே பிசிசிஐ செய்து வருகிறது.
மொத்தம் 11 மைதானங்கள் தயாராகிறது. குழப்பத்தை ஏற்படுத்தி வந்த பாகிஸ்தான் அணியும் கடைசியில் நாங்கள் இந்தியாவிற்கு வந்து உலகக்கோப்பையில் பங்கேற்கிறோம் என்று ஒப்புக்கொண்டது. இந்த உலக கோப்பைக்கு இன்னும் ஆறு மாதத்திற்கும் குறைவான காலங்களே இருக்கும் நிலையில், இந்திய அணி தீவிரமாக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு இந்த கோப்பையை வெல்வதற்கு முனைப்பு காட்டி வருகிறது.