
South Africa-India Matches To Go On Without 'In-House' Spectators (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸின் 4ஆவது அலை பரவி வருகிறது. இந்த 4ஆவது அலையில் அதிவிரைவாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தப் பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்திய அணியினர் அங்கு பயணம் செய்து விளையாட உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சென்றதிலிருந்து இந்திய வீரர்கள் கடும் பயோ-பபுள் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.