Advertisement

SA vs WI, 2nd Test: பிளேயிங் லெவனை அறிவித்தது தென் ஆப்பிரிக்கா; நான்கு மாற்றங்கள்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
South Africa Make Four Changes In Playing XI For Second Test Against West Indies
South Africa Make Four Changes In Playing XI For Second Test Against West Indies (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 07, 2023 • 10:27 PM

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 07, 2023 • 10:27 PM

இந்நிலையில் இவ்விரு அணிகளிக்கும் இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அணியை தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களில் இருந்து 4 பேரை மாற்றி உள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய மார்கோ ஜான்சன், செனுரான் முத்துசாமி, கீகன் பீட்டர்சன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், கேசவ் மகாராஜ் மற்றும் சைமன் ஹார்மர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். .

தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன்: டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், டோனி டி சோர்ஜி, டெம்பா பவுமா (கேப்டன்), ரியான் ரிக்கல்டன், ஹென்றிச் கிளாசென், வியான் முல்டர், கேசவ் மகாராஜ், சைமன் ஹார்மர், ககிசோ ரபடா, ஜெரால்ட் கோட்ஸி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement