
South Africa pacer Kagiso Rabada becomes 4th player to take hat-trick in T20 WC (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
இப்போட்டியின் கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் ரபாடா வீசினார். முதல் பந்தில் வோக்ஸ், இரண்டாவது பந்தில் மார்கன், முன்றாவது பந்தில் ஜோர்டான் ஆகியோரை வெளியேற்றினார். இதன்மூலம் ரபாடா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4ஆவது பந்துவீச்சாளர் ரபாடா என்பது குறிப்பிடத்தக்கது.