
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது நாளை (ஆகஸ்ட் 07) முதல் தொடங்குகிறது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை) டிரினிடாட்டில் தொடங்கவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில். இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அறிமுக வீரரான மேத்யூ ப்ரீட்ஸ்கி மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சில சாதனைகளை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, இத்தொடரில் ரபாடா மேற்கொண்டு 9 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300ஆவது விக்கெட்டை பதிவுசெய்வதுடன், தென் ஆப்பிரிக்க அணிக்காக இச்சாதனையை படைக்கும் 6ஆவர்கு வீரர் எனும் பெருமையையும் பெறுவார்.