
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் 2023-2025ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிங் அங்கமாக இத்தொடர் நடைபெற்ற நிலையில், புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் புதுபிக்கப்பட்ட இந்திய புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணி 68.52 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். அதேசமயம் நியூசிலாந்து அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை அணி 50 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் தொடர்கின்றனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 38.89 புள்ளிகளைப் பெற்று இந்த பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இதற்கு முன் 5ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியானது 36.66 புள்ளிகளுடன் ஒரு இடம் பின் தங்கி 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து அணி இங்கிலாது அணியானது 36.54 புள்ளிகளுடன் தொடர்ந்து 6ஆவாது இடத்தில் தொடர்கிறது.