Advertisement

இந்தியாவுக்கு எதிரான எங்கள் சாதனை இம்முறையும் தொடரும் - ஷுக்ரி கண்ராட்!

காலம் காலமாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியை சந்திக்காமல் இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கண்ராட் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 05, 2023 • 13:01 PM
இந்தியாவுக்கு எதிரான எங்கள் சாதனை இம்முறையும் தொடரும் - ஷுக்ரி கண்ராட்!
இந்தியாவுக்கு எதிரான எங்கள் சாதனை இம்முறையும் தொடரும் - ஷுக்ரி கண்ராட்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை என்ற கணக்கில் வென்றது. ரோஹித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுருடன் களமிறங்கிய இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இத்தொடரில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் & டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடரை விட கடைசியாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Trending


ஏனெனில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வலுவான ஆஸ்திரேலியாவையே அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் வரலாற்றில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஆனால் 1992 முதல் இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் மட்டும் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் இந்தியா திண்டாடி வருகிறது.

கடைசியாக 2021/22 சுற்றுப்பயணத்தில் விராட் கோலி தலைமையில் முதல் போட்டியில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2ஆவது போட்டியில் விராட் கோலி காயத்தால் வெளியேறியதை பயன்படுத்தி இந்தியாவை சாய்த்த டீன் எல்கர் தலைமையிலான இளம் தென் ஆப்பிரிக்கா அணி 3ஆவது போட்டியிலும் வென்று 2 – 1 கணக்கில் தொடரை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்து கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டது.

இந்நிலையில் காலம் காலமாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியை சந்திக்காமல் இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கண்ராட் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சாதனையை இம்முறையும் தொடர்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இத்தொடர் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது அனைவருக்கும் மிகப்பெரிய ஊக்கமாகும். சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் களத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி உலகின் வலுவான அணிக்கு எதிராக நல்ல துவக்கத்தை பெற முயற்சிக்க உள்ளோம்.

மொத்தத்தில் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியாவுக்கு எதிராக தோற்காமல் இருந்து வரும் எங்களின் பெருமைமிக்க சாதனையை தக்க வைத்து எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து பண்புகளும் திறமைகளும் தற்போதைய அணிக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement