
South Africa to tour Sri Lanka in Sept for limited-overs series (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் நேற்றுடன் முடைவடைந்தது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் வரவுள்ள ஐபிஎல் தொடருக்காக காத்திருக்கின்றனர்.
அதேவேளையில் இலங்கை அணியோ, அடுத்த தொடருக்கான வேலையில் மும்முறம் காட்டி வாருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.
அதன்படி செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கும் இத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று உறுதிசெய்துள்ளது. அதேபோல் இப்போட்டிகள் அனைத்தும் கொழும்புவிலுள்ள பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்பதையும் அறிவித்துள்ளது.