WI vs SA: 11 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டெஸ்ட், நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
மேலும் இத்தொடரின் போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், கடந்த 2018ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் அணியில் கம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
Trending
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டிஸிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டும் இரண்டு டி20, 5 ஒருநாள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி அனைத்து போட்டிகளையும் வென்றது.
தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரின் அனைத்து செயிண்ட் லூசியா, க்ரெனாடா ஆகிய மைதானங்களில் நடைபெறும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற ஜூன் 1ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now