
South Africa vs England, 1st ODI – SA vs ENG Cricket Match Preview, Prediction, Where To Watch, Prob (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இத்தொடரில் வெற்றிபெற்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியால், நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் நேரடியாக நுழையமுடியும். ஒருவேளை தொடரை இழந்தால் தென் ஆப்பிரிக்க அணி தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து
- இடம் - மங்காங் ஓவல், ப்ளூம்ஃபோன்டைன்
- நேரம் - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)