Advertisement

தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஈஸ்ட் லண்டனில் நடைபெறுகிறது.

Advertisement
South Africa vs West Indies, 1st ODI - Match Preview
South Africa vs West Indies, 1st ODI - Match Preview (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 15, 2023 • 11:00 AM

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 15, 2023 • 11:00 AM

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. நாளை ஈஸ்ட் லண்டனிலுள்ள பஃபலோ பார்க் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - பஃபலோ பார்க் மைதானம், ஈஸ்ட் லண்டன்
  • நேரம் - மாலை 4.30 மணி

போட்டி முன்னோட்டம்

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய உத்வேகத்துடன் ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் குயின்டன் டி காக், டோனி டி ஸோர்ஸி, ரீஸ் ஹெண்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வெண்டர் டுசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சு துறையில் சிசாண்டா மகாலா, லுங்கி இங்கிடி, வெய்ன் பார்னெல், ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஸம்ஸி போன்ற நட்சத்திர பந்துவீச்சாளர்கள்  இருப்பது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் முழுபலத்துடன் களமிறங்கும் முனைப்புடன் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இதில் ஷாமாரா ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ், ரொமாரியா செஃபெர்ட் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். 

பந்துவீச்சில் அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஓடியன் ஸ்மித், ரொவ்மன் பாவெல் என நட்சத்திர பந்துவீச்சாளர்களும் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -62
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 44
  • வெஸ்ட் இண்டீஸ் - 15
  • முடிவில்லை - 03

அணி விபரம்

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பாவுமா (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, லுங்கி இங்கிடி, ஜெரால்ட் கோட்ஸி, ஃபோர்டுயின், சிசண்டா மாகலா

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிராண்டன் கிங், ஷமார் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன், கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், ஒடியன் ஸ்மித், அகீல் ஹோசைன், ஷனன் கேப்ரியல்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப், குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - டெம்பா பாவுமா, ஷமார் ப்ரூக்ஸ், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வெண்டர் டுசென்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ
  • பந்துவீச்சாளர்கள் - லுங்கி இங்கிடி, சிசண்டா மாகலா, அல்ஸாரி ஜோசப்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement