
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் சூப்பர் 12 போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹாபர்ட்டில் நடைபெறுகிறது.
டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஏனெனில் குயின்டன் டி காக், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், ரைலீ ரூஸோவ், ஐடன் மார்கம், ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ் என பல அதிரடி பேட்டர்களும், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, வெய்ன் பார்னெல், மார்கோ ஜான்சென் ஆகியோரும் மஹாராஜ், ஷம்ஸி உள்ளிட்டோரும் இருப்பது அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.