
South African Batter Van Der Dussen Ruled Out Of Final Test Against England (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமனிலையில் வைத்துள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை லண்டனிலுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ரஸ்ஸி வெண்டர் டுசென் கயமடைந்தார். இதையடுத்து அவரது காயம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனாலும் அவரால் மூன்றாவது டெஸ்டில் விளையாடமுடியாது என்பதால், இத்தொடரிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.