WI vs SA, 1st Test: கேசவ் மஹாராஜ் அசத்தல் பந்துவீச்சு; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸீல் 357 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 78 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 86 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வாரிகன் 4 விக்கெட்டுகளையும், ஜெயடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேய்க் பிராத்வைட் - மைக்கைல் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராத்வைட் ஒருபக்கம் நிதானமாக விளையாட மறுமுனையில் பொறுடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய மைக்கைல் லூயிஸ் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Trending
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேசி கார்டியும் கேப்டன் பிராத்வைட்டுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராத்வைட் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கேசி கார்டியும் 45 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலிக் அதானாஸும் 3 ரன்களுடன் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த கவேம் ஹாட்ஜ் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணை விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கவேம் ஹாட்ஜ் 11 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 212 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now