Advertisement
Advertisement
Advertisement

புவிக்கு ஆதரவாக பேசிய ஸ்ரீசாந்த்!

புவனேஷ்வர் குமாருக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 27, 2022 • 14:57 PM
Sreesanth backs Bhuvneshwar Kumar, says never stop believing in your abilities
Sreesanth backs Bhuvneshwar Kumar, says never stop believing in your abilities (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2 - 1 என அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்ற போதும், அணியின் பவுலிங் மோசமாக இருந்ததால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ஆசிய கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் பவுலிங் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமார் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்குகிறார். ஆஸ்திரேலியாவுடனான கடைசி டி20இல் கூட 18வது ஓவரில் 21 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் அவரின் ஃபார்ம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

Trending


இந்நிலையில் புவனேஷ்வர் குமாருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரு பவுலர் சிறப்பாக பந்துவீசும் போதிலும் 60 - 70% தாக்கப்படுவதற்கு வாய்ப்புள் இருக்கும். ஏனென்றால் சிறப்பான பேட்டிங்கும் செய்வார்கள். எனவே புவனேஷ்வர் குமாருக்கு நாம் துணையாக நிற்கவேண்டும். தினேஷ் கார்த்திக்காக அனைவரும் ஆதரவு தருகிறோம். அதே போல தான் புவனேஷ்வர் குமாரும்.

புவனேஷ்வர் குமார் அட்டகாசமாக ஸ்விங் செய்யக்கூடிய பவுலர். ஆஸ்திரேலியா போன்று நல்ல பவுன்ஸ் இருக்கக்கூடிய பிட்ச்-களில் அவர் தனது வேகத்தில் மட்டும் வித்தியாசங்களை காட்டினால் போதும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் நான் சொல்வதை கேட்பார் என்றால், ஒன்றே ஒன்று மட்டும் கூறிக்கொள்கிறேன். பலர் விமர்சிக்க தான் செய்வார்கள். அதனைஎயெல்லாம் கண்டுக்கொள்ளாமல் விளையாட வேண்டும்.

இத்தனை நாட்கள் உங்களின் திறமை தான், இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியது. எனவே அதன் மீது எப்போது நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். புவனேஷ்வர் குமார் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. அவர் நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்” என கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement