Advertisement

ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 05, 2024 • 02:19 PM

 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 05, 2024 • 02:19 PM

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.

Trending

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக செயல்படத் தவறினர். இந்த ஆட்டத்தில் பவர்பிளேவில் ரன்கள் சேர்க்க சிஎஸ்கே தடுமாறியது. இது இறுதிக்கட்ட ஓவர்களில் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கியது.

மிடில் ஆர்டரில் அஜிங்கிய ரஹானே, டேரில் மிட்செல் ஆகியோர் போராடிய போதிலும் அணியால் வெற்றியை ஈட்ட முடியவில்லை. அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் நடப்பு ஐபிஎல் சீசனில் அபாரமாக பந்துவீசிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் நாடு திரும்பியுள்ளது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மதீஷா பதிரனா, தீபக் சஹார், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் டேரில் மிட்செலும் ஒருசில ஓவர்களை வீசிவருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே உத்தேச லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கே), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரனா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் கணிக்க முடியாததாக திகழ்கிறது. ஏனெனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 209 ரன்கள் இலக்கை துரத்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. ஆனால் அதன் பின்னர் சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி 277 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்தது. அதன்பின் அஹ்மதாபாத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இப்போட்டியில் அந்த அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

 அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா ஆகியோருடன் ஹென்ரிச் கிளாசென் இருப்பது மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ் ஆகியோருடன் ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா, ஷபாஸ் அஹ்மத், வாஷிங்டன் சுந்தர் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களும் இருப்பது எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்ஆர்எச் உத்தேச லெவன்: மயங்க் அகர்வால்/ராகுல் திரிபாதி, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement