ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள இரு இடங்களுக்கான போட்டி கடுமையாகியுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 7 வெற்றி 5 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக அந்த அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். அதேசமயம் 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளது.
அணியின் பேட்டிங் வரிசையில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதீஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத் உள்ளிட்ட வீரர்கள் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தாரையில் புவனேஷ்வர் குமார், நடராஜன், நிதீஷ் குமார், ஷபாஸ் அஹ்மத் ஆகியோருடன் கேப்டன் பாட் கம்மின்ஸும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியை பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டி வெறும் சம்பிரதாயம் மட்டுமே. இதில், குஜராத் அணி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அந்த அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்து 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் 8ஆம் இடத்தில் நீடிப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுகான வாய்ப்பில் இருந்தும் வெளியேறியுள்ளது.
அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகியோர் சதமடித்து தங்கள் பார்மிற்கு திரும்பியிள்ளனர். அவர்களுடன் டேவிட் மில்லர், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, மேத்யூ வேட் உள்ளிட்ட வீரர்களும் ஃபார்முக்கு திரும்பினால் அது அணிக்கு பெரும் பலமாக மாறும். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரஷித் கான், சந்தீப் வாரியர், நூர் அஹ்மத், கார்த்திக் தியாகி உள்ளிட்டோர் இருப்பது அணிக்கு பலத்தை சேர்த்து வருகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், ஷாருக் கான், மேத்யூ வேட், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, சந்தீப் வாரியர்.
Win Big, Make Your Cricket Tales Now