ஐபிஎல் 2022: முரளிதரன் மிகப்பெரிய லெஜண்ட் - டேல் ஸ்டெய்ன் புகழாரம்!
கேகேஆர் - சன்ரைசர்ஸ் இடையேயான போட்டியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து, முரளிதரன் மிகப்பெரிய லெஜண்ட் என்று டேல் ஸ்டெய்ன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் 2 போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அடுத்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியது. கேகேஆருக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவரில் 176 ரன்கள் அடிக்க, திரிபாதி மற்றும் மார்க்ரமின் அதிரடி அரைசதங்களால் 18ஆவது ஓவரிலேயே இலக்கை அடித்து சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Trending
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் ஸ்டெய்னும் முரளிதரனும் வெகு விமரிசையாக கொண்டாடினர். அவர்கள் கொண்டாடிய விதம் வியப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்துத்தான் டேல் ஸ்டெய்ன் பேசியுள்ளார்.
ஏலத்திற்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசி எதிரணி வீரர்களை அல்லு தெறிக்கவிடுகிறார். முன்னாள் ஜாம்பவான்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து, பாராட்டுகளை குவித்துவரும் உம்ரான் மாலிக்கை, இந்திய அணியில் ஆடவைக்க வேண்டும் என்று சில முன்னாள் ஜாம்பவான்கள் வலியுறுத்திவருகின்றனர்.
கேகேஆருக்கு எதிரான போட்டியில் அருமையாக பந்துவீசி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷெல்டான் ஜாக்சன் ஆகிய இருவரது விக்கெட்டையும் வீழ்த்தினார். இவர்களில் ஸ்ரேயாஸ் ஐயரை துல்லியமான யார்க்கர் உம்ரான் மாலிக் வீழ்த்த, அந்த விக்கெட்டை முரளிதரனும் ஸ்டெய்னும் படுபயங்கரமாக கொண்டாடினர்.
அதற்கான காரணம் குறித்து பேசிய டேல் ஸ்டெய்ன், “நான் சொல்வது பொய் கிடையாது. சில நேரங்களில் பிளேயர்களின் ஜீனியஸ் தன்மை வெளிப்படும். உம்ரான் மாலிக் ஸ்ரேயாஸுக்கு யார்க்கர் வீசுவதற்கு முன்பாக, இந்த பந்தை யார்க்கராகத்தான் வீசவேண்டும் என்று முத்தையா முரளிதரன் கூறினார். ஆனால் யார்க்கர் வீசினால் பவுண்டரி சென்றுவிடுமென்று நானும் டாம் மூடியும் கூறினோம்.
முரளிதரன் சொன்னதை போலவே உம்ரான் மாலிக் யார்க்கர் வீச, ஸ்ரேயாஸ் ஐயர் போல்டானார். உண்மையாகவே எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீரர்களுக்கு ஜீனியஸ் தன்மை இருக்கிறது. எப்போது, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அந்த விக்கெட்டை கண்டு வியந்துபோனேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now