Advertisement

ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 08, 2024 • 14:52 PM
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள 11 போட்டிகளில் தலா 6 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Trending


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கணிக்க முடியாத அணியாக இருந்து வருகிறது. ஏனெனில் தொடக்கத்தில் இமாலயம் இலக்குகளை நிர்ணயித்து வந்த அந்த அணி, சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் 200 ரன்களை எட்டுவதையே பெரும் சவாலாக பார்த்து வருகிறது. அதுமட்டுமின்றி அந்த அணி சேஸிங்கின் போது தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு மிகப்பெரும் தலைவலியாக அமைந்து வருகிறது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதீஷ் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். அவர்களுடன் அப்துல் சமத், பாட் காம்மின்ஸ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மறுபக்கம் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனாத்கட் உள்ளிட்டோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), ஜெய்தேவ் உனாத்கட், புவனேஷ்வர் குமார், டி நடராஜன்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனி 6 வெற்றிகளைப் பெற்றும் 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது. இருப்பினும் அந்த அணி கடைசியாக விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்த போட்டியில் அவர்கள் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திததன் மூலம் ரன் ரேட்டியில் பலத்த அடி வாங்கியுள்ளது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி உள்ளிட்டோரும் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரவி பிஷ்ன்னோய், குர்னால் பாண்டியா, யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுவது அணிக்கு சற்று உத்வேகத்தை அளித்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: கேஎல் ராகுல் (கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement