
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
இந்தியாவில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் அதிர்ச்சி தோல்விகளைச் சந்தித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
- நேரம் - இரவு 7.30 மணி