சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சன்ரைசர்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Also Read
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி 5 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக ஹைதராபாத் அணி தனது கடைசி மும்பை இந்தியன்ஸிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் முந்தைய தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் அந்த அணி அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசெனையே அதிகம் சார்ந்துள்ளது. அதனால் மற்ற பேட்டர்கள் சோபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் படேல் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெற்று தங்களின் வெற்றியை தொடரும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, ஈஷான் மலிங்கா.
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலின் 6அம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர் ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவருடன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்த மட்டும் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ஹர்திக் பாண்டியா, மிட்செல் சான்ட்னர் ஆகியோருடன் அஷ்வானி குமார், விக்னேஷ் புதூர் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு அழுத்தத்தை அதிகரிக்கின்றனர். அவர்களுடன் ஜஸ்பிரித் பும்ராவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் அந்த அணி தங்களின் தொடர் வெற்றியைப் தொடரும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), நமன் தீர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 24
- மும்பை இந்தியன்ஸ் - 14
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 10
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்- ஹென்ரிச் கிளாசென், ரியான் ரிக்கல்டன்
- பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி, திலக் வர்மா
- ஆல்-ரவுண்டர்கள் - ஹார்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா (துணை கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள்- பாட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா.
Win Big, Make Your Cricket Tales Now