ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரு ஆட்டங்கள் நடைபெற்றுகின்றன. இதில் இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஐபிஎல் தொடரின் கடந்த 2 சீசன்களில் 8ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டும் ஆரம்பத்திலேயே தள்ளாடி வருகிறது. அந்த அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. ஐதராபாத் அணி முதல் ஆட்டத்தில் 131 ரன்னும், அடுத்த ஆட்டத்தில் 121 ரன்னும் தான் எடுத்தது.
அந்த அணியின் பேட்டிங் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி ஆகியோர் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் அணிக்கு திரும்பிய கேப்டன் மார்க்ரம் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரூ.13¼ கோடிக்கு வாங்கிய ஹாரி புரூக் சொதப்பி வருகிறார்.
அப்துல் சமத் மட்டுமே பேட்டிங்கில் மெச்சும் வகையில் செயல்படுகிறார். அந்த அணி தங்களது பேட்டிங் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும். பந்துவீச்சில் குறையில்லாத வகையில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் பரூக்கி, உம்ரான் மாலிக் ஆகியோர் செயல்பட்டு வருகிறது.
மறுபக்கம் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி தனது லீக் ஆட்டங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளை போட்டு தாக்கியது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பாராட்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது. அதிலும் பிரப்சிம்ரான் சிங், ஷிகர் தவான்,ஜித்தேஷ் சர்மா, ஷாருக் கான் போன்ற உள்ளூர் வீர்ரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறனர்.
பந்துவீச்சில் ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சாம் கரண், நாதன் எல்லிஸ், காகிசோ ரபாடா, சிக்கந்தர் ரஸா ஆக்கியோரும் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் தங்களது வெற்றி உத்வேகத்தை தொடரும் வேட்கையுடன் பஞ்சாப் அணியும், சரிவில் இருந்து மீண்டு வரும் நோக்கத்துடன் ஐதராபாத் அணியும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 19
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 13
- பஞ்சாப் கிங்ஸ் - 06
உத்தேச லெவன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), ஹாரி புரூக்/ ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்
பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான் (கே), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் கரண், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ்/காகிசோ ரபாடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - பிரப்சிம்ரன் சிங்
- பேட்டர்ஸ் - ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி
- ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா
- பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அடில் ரஷித், நாதன் எல்லிஸ்
கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - ஷிகர் தவான், ஐடன் மார்க்ரம், பிரப்சிம்ரன் சிங்
Win Big, Make Your Cricket Tales Now