
SRH will come back stronger - Wriddhiman Saha (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
அதிலும் நேற்று சிஎஸ்கே அணியுடனான போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணி நடப்பு சீசன் பிளே ஆஃப் சுற்றிலிருந்து முற்றொலுமாக வெளியேறியது.
இந்நிலையில் இத்தோல்வியிலிருந்து மீண்டும் வலுவாக திரும்புவோம் என்று அந்த அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.