
இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது அபார வெற்றியைப் பெற்றதுடன, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் முடித்து அசத்தியது.
இதனையடுத்து இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடருக்கன் நியூசிலாந்து அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டாம் லேதம் துணைக்கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு வில்லியம் ஓ ரூர்க் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடம் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.