நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. எனினும், 2 போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடந்தது.
இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பீலிடிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் சேர்த்தது. இதில், பின் ஆலன் 51 ரன்களும், டேரில் மிட்செல் 47 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 49 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் பந்து வீச்சில் கருணாரத்னே 4 விக்கெட்டும், ரஜிதா மற்றும் லகிரு குமாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். மதுசங்கா மற்றும் ஷனாகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 275 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணி ஆடியது. இதில், 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை 76 ரன்கள் மட்டுமே எடுத்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டியின் 18ஆவது ஓவரை டிக்னர் வீசினார். அப்போது கருணாரத்னே பேட்டிங் திசையில் இருந்தார். அப்போது 17.4ஆவது பந்தை கருணாரத்னே லெக்சைடு மிட் விக்கெட் திசையில் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடியிருக்கிறார்.