
இலங்கை மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று செம்ஸ்ஃபோர்ட்டில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து மகளிர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேனியல் வையட் - மையா பௌச்சர் இணை களமிறங்கினர்.
இதில் டேனியல் வையட் ஒரு ரன்னிலும், மையா பௌச்சர் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, பின்னர் களமிறங்கிய அலிஸ் கேப்ஸி, கேப்டன் ஹீதர் நைட், எமி ஜோன்ஸ், ஃபெரெயா கம்ப், டேனியல் கிப்சன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.