Advertisement

இலங்கையில் ஆசிய கோப்பை தொடர்?  பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ!

நடப்பாண்டு பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பிசிசிஐயின் அழுத்தம் காரணமாக இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan May 08, 2023 • 20:53 PM
Sri Lanka is likely to host the Asia Cup 2023!
Sri Lanka is likely to host the Asia Cup 2023! (Image Source: Google)
Advertisement

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறுவதும் இல்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது. இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. 

Trending


அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பின்பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டு இது தொடர்பான அறிக்கையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது .

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த முடிவுக்கு இதுவரை ஜெய் ஷா தலைமை வகிக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பதிலளிக்கவில்லை என்றும், இந்த முறை ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் அல்லாது பொதுவான இடத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் செலவுகளை குறைப்பதற்காக இலங்கை அல்லது ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் இருந்து இடம் மாறினால் ஆசிய கோப்பை தொடரை புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர். இந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்தவேண்டும் என பிசிசிஐ ஒற்றைக்காலில் நிற்பதாகவும், பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு இலங்கை மற்றும் வங்காளதேச வாரியங்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தாண்டு ஆசிய கோப்பை தொடரானது இலங்கையில் நடத்தப்படவுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.     


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement