
Sri Lanka make a sensational comeback as they seal a 26-run win over Australia in the second ODI (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி பல்லகலேவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 14 ரன்களிலும், தனுஷ்கா குனத்திலகா 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - தனஞ்செய டி செல்வா பொறுப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
பின்னர் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டி சில்வா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸும் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 13 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.