
Sri Lanka Names 18-Member Squad For Two-Match Test Series Against Pakistan (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடர் 1-1 என சமனடைந்தது.
முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.
அடுத்ததாக பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இலங்கை - பாகிஸ்தான் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. முதல் போட்டி வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.