
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இலங்கை அணியானது இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்திலும் விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து லையன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியானது தங்கள் பிளேயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கோடைகால சுற்றுப்பயணத்தை நாங்கள் பெற்றிருப்பது மிகவும் சிறப்பானது, ஏனென்றால் விக்கெட்டுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, மேலும் ஆண்டின் இந்த நேரத்தில் அதிக சூரிய ஒளி இங்கு இருக்கும்.