
விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்! (Image Source: Google)
ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார்.
இதனால் இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது. மேலும் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.