Advertisement
Advertisement
Advertisement

SL vs AFG, 3rd ODI: அசலங்கா அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan November 30, 2022 • 23:10 PM
Sri Lanka pull off a brilliant win to level the series!
Sri Lanka pull off a brilliant win to level the series! (Image Source: Google)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் முடிவில்லாம் அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பல்லகேலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

Trending


அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 ரன்களிலும், ரஹ்மத் ஷா 22 ரன்களிலும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 4 ரன்களிலும் ஆடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இஃப்ராஹிம் ஸத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய நஜிபுல்லா ஸத்ரானும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதில் நஜிபுல்லா ஸத்ரான் 77 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த இஃப்ராஹிம் ஸத்ரான் 162 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்த் வந்த மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான அணி 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 35 ரன்களோடு பெவிலியன் திரும்ப, மறுமுனையில் இருந்த குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். 

அவருடன் இணைந்த தினேஷ் சண்டிமல் அதிரடியாக விளையாடி 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, குசால் மெண்டிஸும் 67 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 5 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மறுபக்கம் ஷனகா 43, ஹசரங்கா 2 என வெளியெற துனித் வெலேலகா அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெலலகா சிக்சர் அடித்து ஓவரை தொடங்கி வைக்க, நான்காவது பந்தில் அசலங்கா சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

இப்போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அசலங்கா ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஃப்ராஹிம் ஸத்ரான் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement