
Sri Lanka vs Afghanistan, Super 12, T20 World Cup - Match Preview, Cricket Match Prediction, Where T (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 12 சுற்றில் விளையாடும் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் ஒன்றில் இடம்பிடித்துள்ள இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.