SL vs IND, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தோடரில் விளையாடவுள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான், இஷான் கிஷான் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தியது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டானாவது ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- நேரம் - மாலை 3 மணி
- இடம்- ஆர். பிரமதாச மைதானம்
போட்டி முன்னோட்டம்
இந்திய அணி
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது.
அதிலும் இளம் வீரர்கள் இஷான் கிஷான், பிரித்வி ஷா ஆகியோரது ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மேலும் கேப்டன் ஷிகர் தவானும் தனது ஃபார்மை அரைசதமடித்து நிரூபித்துள்ளார்.
பந்துவீச்சில் குர்னால் பாண்டியா, சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் மீண்டும் அபாரமாக செயல்படுத்து அணியின் வெற்றிவாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் நாளைய போட்டியிலும் இந்திய அணி இதே வீரர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தொடக்க வீரர் பிரித்வி ஷா நேற்றைய போட்டியின் போது, பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் நாளைய போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் நிலவுகிறது. ஒருவேளை அவர் நாளைய போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி
நேற்றைய போட்டியில் இலங்கை அணியைச் சேர்ந்த எந்த வீரரும் அரைசதம் அடிக்காமல் இருந்தாலும், அந்த அணி ஒரு வலுவான இலக்கையே நிர்ணயித்திருந்தது.
ஆனாலும் அந்த அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இறுதியில் அதிரடி காட்டிய கருணரத்னேவின் ஃபார்ம் இலங்கை அணிக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.
பந்துவீச்சைப் பொறுத்தவரை இலங்கை அணி வீரர்கள் சற்று பின்னடைவை சந்தித்து வருவது அந்த அணிக்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் தங்கள் தவறை திருத்திக்கொண்டு களமிறங்குவர் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 160
- இலங்கை வெற்றி - 56
- இந்தியா வெற்றி - 92
- முடிவில்லை - 12
உத்தேச அணி
இலங்கை - அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கே), வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, துஷ்மந்தா சாமீரா, லக்ஷன் சண்டகன்.
இந்தியா - ஷிகர் தவான் (கே), பிருத்வி ஷா, இஷான் கிஷன், மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
- பேட்ஸ்மேன்கள் - பிருத்வி ஷா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், தாசுன் ஷானகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ
- ஆல்ரவுண்டர்கள் - வாணிந்து ஹசரங்கா, பானுகா ராஜபக்ஷ
- பந்து வீச்சாளர்கள் - தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், லக்ஷன் சண்டகன்
Win Big, Make Your Cricket Tales Now