
எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரானது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் முதல் சுற்றில் நாளை ஏ பிரிவில் இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்ப்ரீட்சை நடத்துகின்றன.
நடப்பாண்டில் நெதர்லாந்து அணி இரு வெற்றிகளைப் பெற்று சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற கடுமையாக போட்டியிட்டு வருகின்றது. அதன்படி நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கான போட்டியில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றன.
அதன்படி நெதர்லாந்து அணி நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்று சூப்பர் 12 சுற்றுகான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அந்த அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்த வரையில் விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், பாஸ் டி லீட், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் என அதிரடியான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.