
Sri Lanka vs UAE, T20 World Cup, Round 1 - Cricket Match Prediction, Where To Watch, Probable XI And (Image Source: Google)
எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (அக்.18) இரண்டு லீக் ஆட்டங்கள் ஜீலாங்கில் நடக்கின்றன.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் 6ஆவது லீக் ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை-சுன்டன்காபொயில் ரிஸ்வான் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் சந்திக்கின்றன. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நமிபியாவிடம் தோல்வி கண்டது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரக அணி, நெதர்லாந்திடம் பணிந்தது.
அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்துகட்டும். முதல் ஆட்டத்தில் சொதப்பிய இலங்கை அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற்று அமீரகத்துக்கு 'செக்' வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.