
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்த (Image Source: Cricketnmore)
SL-W vs BAN-W, Match 21, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இரு அணிகளும் ஏறத்தாழ அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ள காரணத்தால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் குறைந்துள்ளது.