மூன்றாவது ஒருநாள்: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இதில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் தாக்காவில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கி அணி கேப்டன் குசால் மெண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
வங்கதேசம்: தமீம் இக்பால் , முகமது நைம், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் , மொசாடெக் ஹொசைன், முஹ்மதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன், டஸ்கின் அஹ்மத், ஷெரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசூர் ரஹ்மான்.
இலங்கை: குசல் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, பாதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வில்லா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், சமிக்கா கருணரத்னே, பினுரா ஃபெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா
Win Big, Make Your Cricket Tales Now