
Sri Lankan Cricket Players Refuse To Sign Reduced Pay Contracts (Image Source: Google)
இலங்கை வாரியம் கொண்டு வந்துள்ள ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான கெடு கடந்த 3ஆம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட தங்களுக்கு 3 மடங்கு குறைவான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனினும் நாட்டுக்காக விளையாடுவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும் அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் விளையாட தயாராக இருப்பதாகவும் வீரர்கள் கூறியுள்ளனர்.