
குசால் மெண்டிஸ் சாதனை: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் 2025 டி20 ஆசிய கோப்பையில் தனது பேட்டிங்கால் இரண்டு சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இலங்கை அணி நடப்பு சீசனில் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இதனல் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர் மூலம் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை இலங்கை அணிக்காக அவர் 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,076 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இலங்கை அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.