
Cricket Image for ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட தரங்கா - வங்கதேசத்தைப் பந்தாடியது இலங்கை! (Image Source: Google)
சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் ராய்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இலக்கை லெஜண்ட்ஸ் அணி, வங்கதேச லெஜண்ட்ஸ் அணியுடன் மோதியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்த இலங்கை அணியில் ஜெயசூர்யா நான்கு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த தில்சன் 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய உபுல் தரங்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிவந்த தரங்கா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.