
Sydney Sixers vs Sydney Thunder Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மாற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணி விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி மற்றும் 2 போட்டி முடிவில்லை என மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. அதேசமயம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி மற்றும் 2 போட்டி முடிவில்லை என மொத்தம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்த போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
SS vs ST, BBL 2024-25: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: சிட்னி சிக்ஸர்ஸ் vs சிட்னி தண்டர்
- இடம்: சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
- நேரம்: ஜனவரி 24, மதியம் 1.45 மணி (இந்திய நேரப்படி)