
Star spinner Nathan Lyon backs Australia to become best Test team in the world (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜூன் 28) முதல் தொடங்குகிறது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும், திமுத் கருணரத்னே தலைமையில் இலங்கை அணியும் விளையாடுகின்றன.
மேலும் இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடைபெறவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏனெனில்தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.